கருணாநிதி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி

கருணாநிதி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கனிமொழி

தமிழக அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில் எந்த சூழலையும் சமாளிக்க காவலர்கள் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி ராஜேந்திரன் நேற்று தெரிவித்திருந்த நிலையில் நேற்று மாலை திடீரென திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி, தலிஅவர் முழுஉடல் நலத்துடன் உள்ளார், வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடைசியில் மரணமடைந்த வரை எந்த ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல், அதிமுக.,வினர் அவர் நலமாக உள்ளார் என மட்டும் பேட்டி கொடுத்து வந்தனர். அப்படி இல்லாமல் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இப்படிப் பட்ட சூழலில் கருணாநிதியை க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, தி.மு.க. செயல்தலைவா் ஸ்டாலின், ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா்.

Leave a Reply