கருணாநிதியை சந்தித்த கருணாஸ், தமிமுன் அன்சாரி

கருணாநிதியை சந்தித்த கருணாஸ், தமிமுன் அன்சாரி

கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி இருந்த திமுக தலைவர் கருணாநிதி தற்போது ஒரளவுக்கு தேறியுள்ளதால் அவரை அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் நேற்றிரவு சந்தித்தனர்

கோபாலபுரம் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக தமிமுன் அன்சாரி கூறுகையில், ”கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றபோது எங்களை பார்த்து புன்னகைத்தார். பாச உணர்வோடு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தோம். கருணாநிதி முழுமையாக குணமடைந்து அவரது குரல் தமிழகத்தில் மீண்டும் ஒலிக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.