கருணாநிதியின் 96வது பிறந்த நாள்: டுவிட்டரில் மம்தா பானர்ஜி வாழ்த்து

கருணாநிதியின் 96வது பிறந்த நாள்: டுவிட்டரில் மம்தா பானர்ஜி வாழ்த்து

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சற்றுமுன்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கருணாநிதி அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த ஆட்சியாளர் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply