கருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்?

கருணாநிதிக்கு ஒரு முரசொலி மாறன், ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன்?

திமுக தலைவராக இருந்த மறைந்த கருணாநிதி தனது மருமகன் முரசொலி மாறன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பதும் அவரை ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் தனது மருமகன் சபரீசனை ராஜ்யசபா எம்பியாக்க முயற்சித்து வருவதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

வரும் மார்ச் 26ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக சார்பில் மூன்று எம்பிக்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் சபரீசனை ராஜ்யசபா எம்பி ஆக்க ஸ்டாலின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருவதாகவும், இதற்கு ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வேட்பாளர் அறிவிப்பு வந்தபின்னரே இந்த செய்தி வதந்தியா? அல்லது உண்மையா? என்பது தெரிய வரும்

Leave a Reply