கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த தேர்தல் நிதி: பிரேமலதா கருத்து

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த தேர்தல் நிதி: பிரேமலதா கருத்து

தேர்தல் நிதியாக திமுகவிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு ரூபாய் 25 கோடி வழங்கப்பட்டதாக வந்த தகவல்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் விளக்கம் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக பணம் கொடுத்த விவகாரம் குறித்து எந்த மீடியாவும் பெரிய அளவில் செய்திகள் வெளியிடவில்லை என்பதும், எந்த ஒரு தொலைக்காட்சி சேனலில் இது குறித்து விவாதம் நடத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இதே அதிமுக அல்லது பாஜக கட்சியினர்கள் தேர்தல் நிதி கொடுத்த செய்தி வெளிவந்திருந்தால் அனைத்து தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாக விவாதங்கள் நடத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.