கமல், ஷங்கருக்கு நன்றி கூறிய நடிகர் விவேக்!

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் சமீபத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் விவேக் இணைந்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக கமல்ஹாசன், ஷங்கர் மற்றும் லைகா ஆகியோர்களுக்கு நடிகர் விவேக் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:

நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார் க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்கா வுக்கு என் வாழ்த்துக்கள்

Leave a Reply