கமல் கட்சியுடன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியா?

கமல் கட்சியுடன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியா?

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில் அவருடைய கட்சியுடன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் நடைபெற்று வரும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை அவ்வப்போது புகழ்ந்து வரும் கமல், அந்த கட்சியின் தமிழக தலைவருடன் இணக்கமாக இருப்பதாகவும், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி குறித்து அவர் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் நடவடிக்கைகள், திட்டங்கள் பற்றி டெல்லி தலைமைக்கு அவ்வப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அறிக்கை கொடுத்து வருவதாகவும், டெல்லி தலைமை சரியான நேரத்தில் இதுகுறித்து முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் கமல், ரஜினி கட்சிகள் ஒரே கூட்டணியில் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்

கமல், ரஜினி, அரசியல், கேரளா, கம்யூனிஸ்ட்

Communist party will be alliance with kamal party

Leave a Reply

Your email address will not be published.