கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு! மே 20ல் தீர்ப்பு

கமல்ஹாசன் முன்ஜாமீன் மனு! மே 20ல் தீர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனுவின் தீர்ப்பு வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்து தீவிரவாதம் குறித்து அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கமல்ஹாசனுக்கு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்ப்டையில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் மே 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பை பொருத்தே கமல் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பது தெரிய வரும்

Leave a Reply