கமல்ஹாசன் மகன் குறித்த புதிய தகவல்:

வைரலாகும் வீடியோ

தீவிர ரசிகர் ஒருவரை கமல்ஹாசன் தனது மகனே என டுவிட்டரில் அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 1989ஆம் ஆண்டு கமலஹாசன் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’அண்ணாத்த ஆடுறார்’ என்ற பாடலை கமல் போன்றே வேடமிட்டு ரசிகர் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலானது

இந்த வீடியோவை பார்த்த கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! என கூறியுள்ளார்.

தீவிர ரசிகரை அவர் மகன் போல் கூறி பதிவு செய்த இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் டுவிட்டுக்கு அந்த ரசிகர் நன்றி தெரிவித்துள்ளார்.

31 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தனது ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இடம்பெற்ற பாடலை இன்றும் மறக்காமல் ரசிகர் ஒருவர் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply