கனிமொழிக்கு எதிரான வழக்கு: தமிழிசை எடுத்த திடீர் முடிவு

கனிமொழிக்கு எதிரான வழக்கு: தமிழிசை எடுத்த திடீர் முடிவு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதியின் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி தற்போது தனது வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தமிழிசை வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழிசை, தெலுங்கானா கவர்னராக பொறுப்பேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply