கனமழை: 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை பெய்துவரும் 14 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.

அதில், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.