கனமழை எதிரொலி : தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை எதிரிலியாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்4 இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.