கந்த சஷ்டி கவசம் படித்த கேப்டன் விஜயகாந்த்:

பரபரப்பு வீடியோ

நடிகரும் தேசிய முன்னேற்ற தேமுதிக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கந்த சஷ்டி கவசம் புத்தகத்தைப் படிப்பது போன்ற வீடியோ ஒன்று பதிவாகியுள்ளது

இந்த டுவிட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்தின் இந்த டுவிட்டை வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.