கதறியழுத இஸ்ரோ சிவன்: கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய பிரதமர்!

கதறியழுத இஸ்ரோ சிவன்: கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய பிரதமர்!

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து திட்டமிட்டபடி விக்ரம்லேண்டர் பிரிந்தாலும், நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனையடுத்து விஞ்ஞானிகள் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் கண்ணீர் விட்டதை பார்த்து அவரை சிலநிமிடங்கள் கட்டிப்பிடித்து அவரது தோளை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறினார்.

நிலவு குறித்த ஆராய்ச்சியை தொடருங்கள் என்றும், நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் இஸ்ரோ சிவனிடம் அவர் தெரிவித்தார்.

Leave a Reply