கண் கலங்க கண்ணீருடன் விடைகொடுத்த ஹர்பஜன் சிங் – இம்ரான் தாஹிர்!

கண் கலங்க கண்ணீருடன் விடைகொடுத்த ஹர்பஜன் சிங் – இம்ரான் தாஹிர்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ஹர்பஜன்சிங் மற்றும் இம்ரான் தாஹிர் உருக்கமான டுவீட்டுகளை பதிவு செய்து கண்ணீருடன் விடை பெற்றனர்.

ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில், ”தமிழ் மக்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல, அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது. மீண்டும் அடுத்த வருடமும் சிஎஸ்கேவுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன் என்று பதிவு செய்துள்ளார். .

அதேபோல் இம்ரான் தாஹிர் தனது டுவிட்டரில், ”என் இனிய தமிழ் மக்களே! விடை பெறுகிறேன் இங்கிருந்து, உங்கள் உள்ளங்களில் இருந்து. அன்பு, தோழமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என் உடன் பிறப்புகளே நன்றி! வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக.. என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன். நில்லாமல் இருக்கட்டும் விசில், எடுடா வண்டிய … போடுடா விசிலை’ என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.