கண்ணியமான உடை அணியவில்லை என்றால்? தீபிகா படுகோனேவுக்கு எச்சரிக்கை

கண்ணியமான உடை அணியவில்லை என்றால்? தீபிகா படுகோனேவுக்கு எச்சரிக்கை

பத்மாவதி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனே கண்ணியமாக உடை அணியவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தாங்கள் தாயைப் போல் கருதும் ராணி பத்மாவதியின் வரலாறு, பத்மாவதி திரைப்படத்தில் திரித்து கூறப்படுவதாக ராஜஸ்தானைச் சேர்ந்த ((Rajput Karni Sena)) ராஜ்புத் கர்னி சேனா என்ற அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் இந்தியா பேசிய பின்நோக்கிச் செல்கிறது என நடிகை தீபிகா படுகோனே விமர்சனம் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் ((Lokendra Singh)) லோகேந்திர சிங், நடிகை தீபிகா படுகோனேவை கண்ணியமாக உடையணியுமாறு எச்சரித்துள்ளதுடன் திரைப்படம் வெளியானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

Leave a Reply