கணவரின் சகோதரர் வீசிய ஆசிட்: இளம்பெண் முகம் பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபடா என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை இளம்பெண் ஒருவரின் முகத்தில் அவரது கணவரின் சகோதரர் குடும்ப பகை காரணமாக முகத்தில் ஆசிட் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த சம்பவத்தில் இளம் பெண்ணின் முகம் முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது மட்டுமன்றி அவரது மூன்று வயது மகளும் இந்த ஆசிட் வீச்சால் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கி அதன் பின்னர் அவரது கணவரின் சகோதரரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது

குடும்பத் தகராறு காரணமாக கணவனின் சகோதரனால் இளம்பெண் ஒருவர் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகியுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply