கணவரின் காதலியை செருப்பால் அடித்த மனைவி: தெலுங்கானாவில் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தின் குக்கட்பள்ளியைச் சேர்ந்தவர் சுஜனா. இவருக்கும், லஷ்மனுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களது இல்லற வாழ்க்கை சரியானதாக அமையவில்லை.

சில மாதங்கள் இப்படியேச் சென்றது. அதன்பின்னர் லஷ்மன், சுஜனாவை விட்டு நிரந்தரமாக பிரிந்துள்ளார். இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, லஷ்மன் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவருடனே தங்கி இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனை கேட்டவுடன் சுஜனா மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். கணவர் மீது அன்பு கொண்ட சுஜனா, அவரை உடனடியாக நேரில் சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால், காதலியை கைவிட மறுத்து சுஜனாவை கண்டு கொள்ளாமலும், பதில் சொல்லாமலும் இருந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சுஜனா, கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கும் லஷ்மன் சார்பில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கோபத்தின் உச்சத்தில் இருந்த சுஜனா ஒரு முடிவை மேற்கொண்டார்.

காதலியுடன் கணவர் இருந்த வீட்டிற்கு உறவினர்களுடன் அதிரடியாக நுழைந்தார். கதவை திறந்த வேகத்தில் அங்கு நின்றுக் கொண்டிருந்த கணவரின் காதலி தலையை பிடித்து இழுத்து அடித்து, பின்னர் சரமாரியாக தாக்கினார்.

அதன்பின்னர் வெளியே இருவரையும் அழைத்து வந்து பொதுமக்கள் முன்னிலையில் செருப்பினால் சரமாரியாக காதலியை தாக்கினார். பின்னர் லஷ்மனையும் அடித்தார்.

லஷ்மன் காதலித்த பெண்ணுக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகியிருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply