கணக்கு பாடத்திற்கு பதிலாக காமப்பாடம் எடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கணக்கு பாடத்திற்கு பதிலாக காமப்பாடம் எடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கணக்கு பாடம் எடுப்பதற்கு பதிலாக உடலுறவு குறித்த காமப்படம் எடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஒரிசா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சுரேஷ் என்பவர் கணக்கு ஆசிரியராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். மாணவிகளை அவர் தொட்டு பேசுவதாக ஏற்கனவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன

இந்த நிலையில் வகுப்பறையில் ஒரு நாள் கணக்கு பாடம் எடுப்பது பதிலாக உடலுறவில் எப்படி ஈடுபட வேண்டும்? உடலுறவினால் என்ன பலன்கள் போன்ற பாடங்களை அவர் எடுத்துக் கொண்டிருந்தார் இதனால் மாணவ மாணவிகள் அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்தனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்து முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply