கடைசி பந்து எல்.பி.டபிள்யூ தானா? சர்ச்சைக்குரிய அவுட்களால் சிஎஸ்கே தோல்வி

தோனியின் ரன் அவுட்டும், கடைசி பந்தில் தாக்கூருக்கு கொடுக்கப்பட்ட எல்.பி.டபிள்யூ அவுட்டும் சர்ச்சைக்குரியதாக உள்ள நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே நேற்று கோப்பையை இழந்தது.

நேற்றைய இறுதி போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் எடுக்க வேண்டியிருந்த நிலையில் தாக்கூருக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டது. அந்த பந்தை கடைசி வரை ரீப்ளே காட்டவே இல்லை. உண்மையில் தாக்கூர் எல்.பி.டபிள்யூ தானா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது.

அதேபோல் தோனி ரன் அவுட்டும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. ரன் அவுட்டா? இல்லையா? என்பதை சரியாக கணிக்க முடியாததால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் தோனிக்கு அவுட் கொடுத்ததும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும் மும்பை அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்

 

Leave a Reply