கடாரம் கொண்டான் படத்தின் சென்சார் தகவல்

கடாரம் கொண்டான் படத்தின் சென்சார் தகவல்

விக்ரம், அக்சராஹாசன் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான் திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது

இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் நேற்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்தனர். இதனையடுத்து வரும் 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது

விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், பிக்பாஸ் புகழ் மீராமிதுன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.