கடன் தொல்லை நீங்கவும், மாங்கல்ய பலம் பெருகவும் உதவும் ஈசன்

கடன் தொல்லை நீங்கவும், மாங்கல்ய பலம் பெருகவும் உதவும் ஈசன்

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து, காலையில் சிவபெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டால், சகலவிதமான உடல்வலிகளும் நீங்கும். மேலும், சுவாமிக்கு அபிஷேகம் செய்து தரும் நல்லெண்ணெய் பிரசாதத்தைப் பெற்று, உடலில் தடவி வந்தால், தீராத நோய்களும் நீங்கும் என்பது காலகாலமாக இருந்துவரும் நம்பிக்கை. அதேபோல், தினமும் இறைவனுக்குப் படைக்கும் நைவேத்திய பிரசாதத்தை கருட பகவானும், சப்த ரிஷிகளாகப் போற்றப்படும் ஏழு கிளிகளும் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்’’ என்கிறார் கோயிலின் கிருஷ்ணன் குருக்கள்.

பொதுவாக ஈசனின் கருவறைக்குப் பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் அல்லது மகாவிஷ்ணு ஆகிய மூர்த்தங்கள் காட்சி தருவார்கள். ஆனால், இங்கே ஈசன் தேவியுடன் உமா மகேஸ்வரராகக் காட்சி தருகிறார். மேலும், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி சமேதராகக் காட்சி தருவதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். இவர்களை வழிபட்டால், பாவக் கணக்கு குறைந்து புண்ணியக் கணக்கு பெருகும் என்பது நம்பிக்கை.

கரூர் – திருச்சி மார்க்கத்தில் கரூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில், காவிரிக்கரையில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது, திருக்கண்மாலீஸ்வரர் திருக்கோயில். அம்பிகை திருநாமம் அருள்மிகு மதுகரவேணி தேனாம்பிகை.

சோழர்கள் காலத்தைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலுக்கு, பிற்கால பாண்டியர்களும், கிருஷ்ணதேவராயரும் திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மாசி 10 முதல் 17-ம் தேதி வரை சூரியனின் கிரணங்கள் சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரைப் பூஜிப்பது அற்புதமாகும். ஞாயிற்றுக்கிழமை களில் இந்தக் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் தொடர்ந்து 11 வாரங்கள் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் நீங்கும், மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

Leave a Reply