கடனை அடைக்க பர்தா அணிந்து ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்!

கடனை அடைக்க பர்தா அணிந்து ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்!

கடனை அடைக்க, பர்தா அணிந்து பெண் வேடத்தில் ஏ.டி.எம்.மை உடைக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்

நேற்று நள்ளிரவில் ரோந்து வந்த போலீசார் சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், நள்ளிரவில், ஏ.டி.எம். ஒன்றின் அருகே பர்தா அணிந்த பெண் ஒருவர் தனியாக சென்று கொண்டிருந்ததை பார்த்தனர். ஆனால் ரோந்து போலீசார் வருவதை கண்ட அந்த பெண் திடீரென தலைதெறிக்க ஓடியதால் சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

அப்போது, அது பெண் வேடத்தில் இருந்த ஆண் என்பது தெரியவந்தது. விசாரணையில், வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை செய்யும் ராஜ்குமார் என்னும் 24 வயது இளைஞர் கடனை அடைக்க, இரவுக் காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம்மை உடைக்க வந்தது தெரியவந்தது.

Leave a Reply