கடனுக்கு பதில் படுக்கைக்கு வா! சென்னை இளம்பெண்ணை அழைத்த தொழிலதிபர் கைது

கொடுத்த கடனை கொடுக்க முடியாவிட்டால் படுக்கைக்கு வா! என்று அழைத்த தொழிலதிபர் ஒருவரை சென்னை போலீசார் கைது செய்தனர்

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம் என்ற பகுதியில் உள்ள மறைமலை நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அதே பகுதியில் டிரான்ஸ்போர்ட் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஒருவருக்கு கடன் கொடுத்துள்ளார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறி உள்ளார். கொடுத்த கடனை அடிக்கடி கேட்டு வந்த முத்துக்குமார், ஒரு கட்டத்தில் கடனை கொடுக்க முடியாவிட்டால் அதற்கு பதிலாக படுக்கைக்கு வா என்று மூன்று குழந்தைகளின் முன் அநாகரிகமாக அழைத்துள்ளார்

இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் வந்துள்ளது. இதனை அடுத்து முத்துக்குமார் அந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பெண் செய்த புகாரையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முத்துக்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயான ஒருவரை தொழிலதிபர் ஒருவர் கொடுத்த கடனுக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *