கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ்

கடத்தப்பட்ட 10 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீஸ்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சமீபத்தில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக போலீசில் தம்பதி புகார் அளித்தனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில் குழந்தை திடீரென காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை தற்போது மீட்கப்பட்டது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தையை 10 மணி நேரத்தில் போலீஸ் மீட்டது

Leave a Reply