ஓவியா பிறந்த நாள் விழாவில் ஆரவ், காயத்ரி

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவருமான ஓவியா இன்று தனது 28வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் ஓவியாவுக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நடந்த பிறந்த நாள் கேக் வெட்டும் விழாவில் நடிகை காயத்ரி, நடிகர் ஆரவ் உள்பட ஓவியாவுக்க்கு நெருக்கமான நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிரித்த முகத்துடன் கேக் வெட்டிய ஓவியா, தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply