ஓவியா நடிப்பது இந்த ஒரு படம் மட்டுமே!

ஓவியா நடிப்பது இந்த ஒரு படம் மட்டுமே!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஓவியா, விஜய் 62 உள்பட பல திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘உள்பட ஒருசில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

ஆனால் ஓவியா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் இப்போதைக்கு ‘காஞ்சனா 3’ படத்தில் நடிக்க மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், மற்ற செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஸ்கிரிப்ட் பார்த்து யாராலும் படத்தை தேர்வு செய்ய முடியாது என்றும் புரடொக்சன் கம்பெனி மற்றும் இயக்குனரின் அனுபவம் ஆகியவற்றை மட்டுமே வைத்து படங்களை தான் தேர்வு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply