ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு: சாலையில் சென்ற கார்கள் மீது மோதியதால் பரபரப்பு

ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு: சாலையில் சென்ற கார்கள் மீது மோதியதால் பரபரப்பு

சென்னை சிறுசேரியில் இருந்து கோயம்பேடு சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து ஒன்று வேளச்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்தின் ஓட்டுனர் ராஜேஷ்கண்ணா என்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த மாரடைப்பால் உடனே அவர் மரணம் அடைந்த நிலையில் அவர் ஓட்டிய பேருந்து சாலையில் தாறுமாறாக சென்றது

இதனால் பேருந்து சாலையில் சென்ற கார்கள் மீது மோதியது, இதில் 8 கார்கள் சேதம் அடைந்தது. அதன்பின் ஓரிடத்தில் பேருந்து நின்றது. இந்த விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply