shadow

இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.

இந்த பாடல் தேசிய விருதையும் பெற்றுள்ளது. இந்த பாடல் சினேகா பாடுவது போன்று திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவருடன் மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு சில வரிகளை பாடுவார் அவர்தான் கோமகன்.

இவர் இன்று காலமானார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் பல இசைக் கச்சேரிகளை நடத்தி உள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply