ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்திய செங்கல்பட்டு மாணவர் பரிதாப பலி

ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்திய செங்கல்பட்டு மாணவர் பரிதாப பலி

செங்கல்பட்டில் பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து விழுந்ததில் மாணவன் தீப்பற்றி உயிர் இழந்தார். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30ஆம் தேதி பள்ளி விளையாட்டு போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி வலம் வரும் போது விக்னேஷ் என்ற மாணவருக்கு தீப் பிடித்து பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து விக்னேஷ் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு காவல்துறை பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published.