ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தாலும் இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியது


இதனை அடுத்து இந்தியா தோல்வி அடைந்தது. அடுத்து கிடைத்த பெனால்டி கார்னர் பயன்படுத்தி பெல்ஜியம் அணி கோல்களாக போட்டு வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்