‘காட்மேன்’ சீரியல் குறித்து எஸ்.வி.சேகர் டுவீட்

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் வெப்தொடராக உருவான ’காட்மேன்’ ஜூன் 12ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தொடர் வரும் 12ம் தேதி வெளியாகாது என ஜீ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என புகார் அளித்த எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்துக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட காட்மேன் இனி ஒளிபரப்பாகாது. சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு பதியப்பட்டுவிட்டது. சரியான முறையில் கம்ப்ளைண்ட் டிராப்ட் செய்து கொடுத்த சீனியர் வழக்கறிஞர் குமரகுரு அவர்களுக்கும் ஒற்றுமையுடன் ஒரே சிந்தனையுடன் பயணித்த, ஜாதி வேறுபாடின்றி ஆதரித்த அனைத்து இந்து சகோதரர்களுக்கும், மாற்று மத சகோதரர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும். இதன் நீதி தனிமரம் தோப்பாகாது. ஒற்றுமையே உயர்வு

எஸ்வி சேகரின் இந்த டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *