ஒரே மாதத்தில் இரண்டு விஜய்சேதுபதி படங்கள் ரிலீஸ்?

ஒரே மாதத்தில் இரண்டு விஜய்சேதுபதி படங்கள் ரிலீஸ்?

விஜய்சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் அல்லது தீபாவளிக்கு முன்கூட்டியே என அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் படம் ‘மாமனிதன்’ படத்தையும் வரும் அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சீனுராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

வரும் அக்டோபரில் விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாகவிருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு குஷியை அளித்துள்ளது

Leave a Reply