ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்: மகிழ்ச்சியில் பெற்றோர்கள்

போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த 6 குழந்தைகளில், 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் என்றும், தாயும் சேய்களும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலந்து நாட்டில் இதுபோன்ற பிரசவம் நடப்பது இதுவே முதல்முறை. பொதுவாக, 4.7 பில்லியன் மக்களில், ஒரு நபருக்கு தான் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தை பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு போலந்து அதிபர், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து குழந்தைகளின் தாய் கூறும் போது, ‘நாங்கள் 5 குழந்தைகளை தான் எதிர்பார்த்தோம். முதலில் பயமாகத் தான் இருந்தது. ஆனால் குழந்தைகளை பார்த்த பிறகு என்னால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை’ என கூறியுள்ளார்.

Leave a Reply