ஒரே நாளில் 895 பேர் மரணம்: மகாராஷ்டிராவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வரும் நிலையில் இன்று இதுவரை இல்லாத அளவில் மிக அதிக உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 895 பேர் பலியாகியுள்ளனர் இதுதான் மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிகபட்ச உயிர்பலி என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 66,355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 44,10,358 பேர் மகாராஷ்டிராவில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது மகாராஷ்டிராவில் 6,72,434 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதுவரை 36,69,548 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்த பலி எண்ணிக்கை 66,179 என்றும் கூறப்பட்டுள்ளது

Leave a Reply