ஒரே நாளில் 350 மில்லியன் மரங்கள்: இந்திய சாதனையை முறியடித்த எத்தியோப்பியா

பூமி ஒவ்வொரு வருடமும் வெப்பமாகி வரும் நிலையில் உலகம் முழுவதும் மரம் நடவேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் சாதனைகள் எத்தியோப்பியா நாடு முறியடித்துள்ளது

ஒரே நாளில் அதிக மரங்கள் நட்ட நாடு என்ற பெருமையை இந்தியா வைத்திருந்த நிலையில் தற்போது உலகிலேயே ஒரே நாளில் அதிக மரங்களை புதிதாக நட்ட நாடு என்ற பெருமையை எத்தியோப்பியா நாடு பெற்றுள்ளது. ஒரே நாளில் எத்தியோப்பியாவில் 350 மில்லியன் மரங்கள் நடப்பட்டு உள்ளது என அந்நாட்டில் செய்திப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன

மேலும் இந்த ஆண்டுக்குள் 4 பில்லியன் மரங்கள் மொத்தம் நட வேண்டும் என்ற இலக்கை எத்தியோப்பியா கொண்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக எத்தியோப்பியா கடும் வறட்சியில் இருந்த நிலையில் அந்நாட்டு மக்கள் வறட்சியில் இருந்து மீள ஒரே வழி மரங்கள் நடுவதுதான் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

Leave a Reply