ஒரே தொகுதிக்கு 3 கட்டமாக தேர்தல் நடக்கும் வினோதம்

ஒரே தொகுதிக்கு 3 கட்டமாக தேர்தல் நடக்கும் வினோதம்

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் என்ற தொகுதியில் மட்டும் 3 கட்டமாக தேர்தலை நடத்த போவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொகுதியில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும் காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலை பல கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலின்போது கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply