ஒரே தாய்-தந்தைக்கு பிறந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்: என்ன மர்மம்?

ஒரே தாய்-தந்தைக்கு பிறந்த 6 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்: என்ன மர்மம்?

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புறம் என்ற பகுதியை சேர்ந்த ரபீக் – சப்னா தம்பதிக்கு 2010ஆம் ஆண்டு திருமணமான நிலையில், திருமணமாகிய இந்த 9 ஆண்டுகளில் இந்த தம்பதிக்கு 6 குழுந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளன. இவற்றில் 3 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு குழந்தை மட்டும் 5வது வயதில் மரணம் அடைந்ததாகவும் மற்ற 5 குழந்தைகளும் பிறந்து ஒரே ஆண்டுக்குள் மரணமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் மர்மமான முறையில் மரணமடைந்து வருவதால் இதில் ஏதேனும் மர்மம் உள்ளதா என போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால், குழந்தைகளின் மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனையிலும் குழந்தைகளின் மரணம் இயற்கை மரணம் என்றே மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளதால் இந்த மர்ம மரணத்திற்கு விடை கிடைக்காமல் மர்மம் நீண்டு கொண்டே போகிறது

Leave a Reply

Your email address will not be published.