ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மர்ம மரணம்: தற்கொலையா?

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மர்ம மரணம்: தற்கொலையா?

ஆந்திரா மாநிலத்தில் உள்ள வாரங்‌கல் என்ற மாவட்டத்தில் உள்ள திருமலகிரி என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்‌ளதால் அந்த பகுதியே பரபரப்பு அடைந்துள்ளது.

பால்ராஜ் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்பத்துடன் திருமலகிரியிலுள்ள ராஜபேட்டையில் கோழிபண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கேயே அவர்கள் தங்கி பணியாற்றி வந்துள்ளனர். நேற்றிரவு உறவினர் வந்ததால் பண்ணையிலிருந்து கோழி ஒன்றை சமைத்து உண்டுள்ளனர். இந்தநிலையில், பால்ராஜ் குடும்பத்தினர் 7 பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இரவு‌ சாப்பிட்ட உணவால் இறந்தனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply