ஒரே ஒரு குத்துப்பாட்டு: ரணகளமாகிய மணமேடை!

ஒரே ஒரு குத்துப்பாட்டு: ரணகளமாகிய மணமேடை!

திருமண நிகழ்ச்சி மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது கடந்த சில ஆண்டுகளாக இருந்துவரும் கலாச்சாரமாக உள்ளது. இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் குத்துப்பாட்டு சரியாக பாடவில்லை என்று சில போதை ஆசாமிகள் செய்த பிரச்சனையால் திருமண மேடை ரணகளமாக மாறியது

தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை என்ற பகுதியில் நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது டிஜே என்று அழைக்கப்படும் இசை கச்சேரி நடந்தது. இந்த இசை கச்சேரியின் போது மாப்பிள்ளை வீட்டார்கள் கூறிய குத்துப் பாடல்களை டிஜே இசைக்குழுவினர் பாடினார். ஆனால் அந்த பாடல் சரியில்லை என பெண் வீட்டார்கள் கூற, இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்

பெண்கள் உள்பட பலர் போதையில் இருந்ததால் அவர்களுடைய தாக்குதல் அதி தீவிரமானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். திருமண வீட்டில் திருமணத்திற்கு வந்தவர்கள் போதையால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply