ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு

ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு

ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் இதுவரை பங்கேற்க யாரும் முன்வரவில்லை

இன்றைய உலகில் செல்போன் இல்லாதவர்களே உலகில் இல்லை என்ற நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் செல்போனின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று போட்டி ஒன்றை வைத்துள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக விட்டமின்வாட்டர் என்ற தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் பங்கு பெறுபவர்கள் இந்த பதிலுடன் #nophoneforayear மற்றும் #contest என்ற ஹேஷ்டேக்குகளையும் இணைத்து பதிவிட வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள கடைசி தேதி ஜனவரி 8, 2019. இதற்குள் ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட வேண்டும். இதன் பிறகு போட்டியில் தேர்வாகும் நபர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட மொபைல் போன் வழங்கப்படும்.

Leave a Reply