ஒரு ஃபேஸ்புக் லைக்குக்கு ஒரு குத்து: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்

ஒரு ஃபேஸ்புக் லைக்குக்கு ஒரு குத்து: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்

சமுக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து அதில் லைக்குகள் பெறுவதில் அனைவருக்கும் இருக்கும் விருப்பம் தான் 21 வயது இளம்பெண்ணான அடால்ஃபினா கேமிலிக்கும் இருந்தது. சமீபத்தில் அவர் தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்து அதற்கு கிடைக்கும் லைக்குகளை எண்ணி கொண்டிருந்தார்

இந்த நிலையில் இதையறிந்த கணவன் ஆத்திரமாகி மனைவியின் புகைப்படத்திற்கு விழும் ஒவ்வொரு லைக்குக்கு ஒரு குத்து என்று முகத்தை கிட்டத்தட்ட சிதைத்தே விட்டார். மனைவி கதறி கதறி மன்னிப்பு கேட்டபோதிலும் லைக்குகள் அதிகமாக அதிகமாக அவருக்கு குத்துக்கள் விழுந்து கொண்டே இருந்தது.

இதுகுறித்து பக்கத்து வீட்டார் மூலம் அறிந்த காவல்துறை உடனடியாக விரைந்து வந்து கேமிலியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கணவரை கைது செய்தனர். மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பராகுவே நாட்டில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply