ஒருவழியாக கர்ஜித்தது த்ரிஷாவின் அடுத்த படம்

ஒருவழியாக கர்ஜித்தது த்ரிஷாவின் அடுத்த படம்

த்ரிஷா நடித்த ‘கர்ஜனை’ மற்றும் ‘சதுரங்க வேட்டை 2’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்னரே தயாராகிவிட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் த்ரிஷாவின் கர்ஜனை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ‘எஸ்.டி.சி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

சுந்தர் பாலு இயக்கியுள்ள இந்த படத்தில் த்ரிஷா, வம்சிகிருஷ்ணா, அமித் பார்கவ், மதுமிதா, ஸ்ரீரஞ்சனி, வடிவுக்கரசி உள்பட பலர் நடித்துள்ளனர். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்த படம் பாலிவுட்டில் அனுஷ்கா சர்மாவின் ‘என்.ஹெச் 10’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.