ஒருவர் எத்தனை டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே துறையின் புதிய அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் இயங்கிவரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இதுவரை மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இருந்த நிலையில் தற்போது அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது

ஒருவர் எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இந்த கட்டுப்பாடு இருந்ததால் திருவிழா, திருமணம், கல்வி சுற்றுலா செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அடைந்தனர். மொத்தமாக டிக்கெட் புக் பண்ண முடியாத நிலை இருந்து வந்தது

இந்த நிலையில் ரயில்வே துறையின் தற்போதைய அறிவிப்பு காரணமாக மொத்தமாக ஒரு விசேஷங்களுக்கு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பாக உள்ளது

ஆனால் அதே நேரத்தில் இந்த வசதியை புரோக்கர்கள் தவறாக பயன்படுத்தி விட வாய்ப்புகள் வாய்ப்பு உள்ளது என்பதால் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அனைவரும் தகுந்த ஆவணங்களை பயணத்தின் போது கொண்டு செல்ல வேண்டும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது

Leave a Reply