ஒருநாள் முதல்வர் போல், ஒருநாள் கைதி: கர்நாடகாவில் புதிய திட்டம்!

அர்ஜுன் நடித்த முதல்வன் என்ற திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வர் என்ற ஆச்சரியமான காட்சியை பார்த்து இருக்கிறோம். அதுபோல் தற்போது கர்நாடகாவில் ஒருநாள் கைதி என்ற புதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் இருக்கும் ஹிண்டல்கா என்ற சிறைச்சாலையில் ரூபாய் 500 செலுத்துவதன் மூலம் அந்த சிறைச்சாலையில் ஒரு நாள் முழுவதும் கைதியாக இருக்கலாம்

இந்த திட்டத்தின் படி வரும் கைதிகளுக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது என்பதும், அசல் கைதிகளுக்கு உள்ளதுபோல் கைதி எண், சீருடை, உணவு, வேலைகள் என அவர்கள் உண்மையான கைதிகள் போலவே ஒரு நாள் முழுவதும் நடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.