shadow

 இன்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா?

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.38 கோடியாக உயர்வு என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது

உலகளவில் இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 8.16 லட்சமாகும் என்பதும், கொரோனாவிலிருந்து இதுவரை 1.63 கோடி பேர் மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 61,767 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

அமெரிக்காவில் 59 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், அமெரிக்காவில் இதுவரை 1.81 லட்சம் பேர் பலியாகிவிட்டனர் என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்தி. மேலும் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,448 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் 31 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 58,546 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,696 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா முதலிடத்தில் உள்ளது.

பிரேசிலில் 36 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.15 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 21,434 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *