ஒருசிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஏன்? ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் விளக்கம்

காஷ்மீர் மாநிலத்தில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் ஒருசிலர் கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை பேணி காக்கவே சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்ரமணியன் மருத்துவமனைகள் முழுமையாக இயங்குவதாகவும், கடந்த காலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செயற்கைக்கோள் மற்றும் கேபிள் டிவி இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாகவும், ஜம்மு,காஷ்மீரில் உள்ள 12 மாவட்டங்கள் அமைதியாக உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

Leave a Reply