ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது;

 மத்திய அரசு எச்சரிக்கை

நேற்றிரவு இந்திய சீன எல்லையில் இரு தரப்பு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய தரப்பில் 20 இராணுவ வீரர்களும் சீன தரப்பில் 43 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்

இந்த நிலையில் சீனா ஏற்கனவே இந்தியாவின் மீது குற்றச்சாட்டை தெரிவித்துள்ள நிலையில் தற்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது

லடாக் எல்லையில் உள்ள நிலைமையை சீன தரப்பு ஒருதலைப்பட்சமாக மாற்ற முயன்றதால் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும் சீனாவால் தான் வன்முறை வெடித்தது என்றும், இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சீன தரப்பு ஒப்பந்தத்தை மதித்து இருந்தால் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply