ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக் குழலில் சிக்கிய நிலக்கடலை:

மருத்துவர்கள் அகற்றி சாதனை

கோவையில் ஒன்றரை வயது குழந்தையின் மூச்சுக் குழலில் சிக்கிய நிலக்கடலையை எடுக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பூர் மாவட்டம் ஆலங்காடு என்ற பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை நிலக்கடலை சாப்பிடும்போது ஒரு நிலக்கடலை திடீரென மூச்சுக்குழலில் சிக்கிக்கொண்டது

இதனை அடுத்து அவர் திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் கோவை மருத்துவமனைக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர்

அங்கு குழந்தைக்கு உடனடியாக மயக்க மருந்து செலுத்தி உள்நோக்கு கருவி மூலம் மூச்சுக்குழாயில் இருந்த நிலக்கடலையை மருத்துவக்குழுவினர் அகற்றினார். இதனால் குழந்தை நூலிழையில் உயிர் தப்பியது இதனையடுத்து மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply