ஒடிஷாவில் 5வது முறையாக ஆட்சியை பிடிக்கின்றது பிஜு ஜனதாதளம்

பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிஷா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் கடந்த நான்கு முறை வென்ற நவீன் பட்நாயக் அவர்களின் பிஜூ ஜனதா தளம் இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. எனவே நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வராகிறார்.

ஒடிஷாவில் சற்றுமுன் நிலவரப்படி பிஜூ ஜனதா தளம் 94 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply